நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ் இலக்கியத்துறையில் 2008 ஆம் கல்வியாண்டு முதல் பணியாற்றி வருகிறேன். 2005 முதல் 2008 முதல் ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றியுள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் நான்கு மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இக்கால இலக்கியம். நாட்டுப்புறவியல். சங்க இலக்கியங்கள் ஆகிய களங்களில் 30 க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் பல எழுதியுள்ளேன்.
பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் உழவுபாரதம் என்னும் சான்றிதழ் பாடத்திட்டத்திற்கான உழவர் ஏற்றமே உழவின் மேன்மை என்னும் நூலில் உழவனே உனக்கான நேரமிது, உரிமையை மீட்டெடு! என்னும் தலைப்பில் எனது கட்டுரை இடம்பெற்றுள்ளது.
பொள்ளாச்சி நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் மனையியல் மகத்துவம் என்னும் சான்றிதழ் பாடத்திட்டத்திற்கான மனையியல் மேம்பாடு என்னும் நூலில் பெற்றோரைப் போற்றிக்காத்தல் என்னும் தலைப்பில் எனது கட்டுரை இடம்பெற்றுள்ளது.
சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள கொங்கு நாட்டுப் புலவர்களின் பாடல்களைப் பண்பாட்டு நோக்கில் ஆராய்ந்துள்ளேன்.