நான் 2009 முதல் 2013 வரை கரூர் கொங்கு மேனிலைப்பள்ளியில் 4 ஆண்டுகள் தமிழாசிரியராகவும், ஜூலை 2013 முதல் ஜூன் 2024 வரை உடுமலைப்பேட்டை வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 12 ஆண்டுகள் உதவிப்பேராசிரியராகவும்,தற்போது ஜூலை2024 முதல் பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி தமிழ் இலக்கியத்துறையில் (இளங்கலை/முதுகலை) உதவிப்பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றேன். கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், 18 ஆண்டுகளாக சிலம்பாட்டக் கலை பயிற்றுநராக இருக்கும் நிலையில் கவியரங்கம், உரைவீச்சு, பட்டி மன்றம், மாவட்ட, மண்டல், மாநில, தேசிய அளவிலான சிலம்பாட்டக் கலைப் போட்டிகளிலும், நிகழ்கலைகளிலும் பங்கேற்று உள்ளேன். புதிய விடியல், கவிமுத்துகள், பூக்களின் பார்வையில் மானுடம் எனும் மூன்று கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளேன்.